நூல்கள்›புறநானூறு›பாடல் 2369

பாடல் 2369

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்

இரங்கு முரசின், இனம்சால் யானை,

நிலந்தவ உருட்டிய நேமி யோரும்

சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே

நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் . . . .

சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!

நோகோ யானே; நோக்குமதி நீயே;

மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை

இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்

வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார், . . . .

பேரமர் உழந்த வெருவரு பறந்தலை.

விழுநவி பாய்ந்த மரத்தின்,

வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.

ஆண்மையோன் திறன்!

← பாடல் 2368பாடல் 2370 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்