நூல்கள்›புறநானூறு›பாடல் 2368

பாடல் 2368

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்

பயிலாது அல்கிய பல்காழ் மாலை,

மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்,

புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்

ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை, . . . .

உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்

பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது

கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக்

கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்

பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க், . . . .

கொடுஞ்சிறைக் க்ரூஉப்பருந்து ஆர்ப்பத்,

தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.

கருங்கை வாள் அதுவோ!

← பாடல் 2367பாடல் 2369 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்