நூல்கள்›புறநானூறு›பாடல் 2364

பாடல் 2364

ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,

ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்

போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்

பல் ஆன் கோவலர் படலை சூட்டக்,

கல் ஆயினையே, கடு மான் தோன்றல், . . . .

வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்

பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்

கடும் பகட்டு யானை வேந்தர்

ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.

வென்றியும் நின்னோடு செலவே!

← பாடல் 2363பாடல் 2365 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்