நூல்கள்›புறநானூறு›பாடல் 2363

பாடல் 2363

பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி,

மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,

அணி மயில் பீலி சூட்டிப், பெயர் பொறித்து,

இனி நட்டனரே கல்லும், கன்றொடு

கறவை தந்து பகைவர் ஓட்டிய . . . .

நெடுந்தகை கழிந்தமை அறியாது,

இன்றும் வருங் கொல் பாணரது கடும்பே?

இன்றும் வருங்கொல்!

← பாடல் 2362பாடல் 2364 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்