நூல்கள்›புறநானூறு›பாடல் 2362

பாடல் 2362

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்

இரும்பறை இரவல! சேறி ஆயின்,

தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,

வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே

பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து, . . . .

கல்லா இளையர் நீங்க நீங்கான்,

வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்,

கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

களிற்றடி போன்ற பறை!

← பாடல் 2361பாடல் 2363 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்