நூல்கள்›புறநானூறு›பாடல் 2361

பாடல் 2361

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;

பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்

புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;

ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று;

நிரையோடு வரூஉம் என்னைக்கு . . . .

உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

தன்னினும் பெருஞ் சாயலரே!

← பாடல் 2360பாடல் 2362 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்