நூல்கள்›புறநானூறு›பாடல் 2360

பாடல் 2360

அந்தோ! எந்தை அடையாப் பேரில்;

வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு

வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்,

வெற்றுயாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக்

கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; . . . .

வையங் காவலர் வளம்கெழு திருநகர்,

மையல் யானை அயாவுயிர்த் தன்ன

நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை

புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்

பயந்தனை, மன்னால், முன்னே! இனியே . . . .

பல்ஆ தழீஇய கல்லா வல்வில்

உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி,

நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை

விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட,

நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய . . . .

வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்,

கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகலம் மகடூஉப் போல

புல்என் றனையால், பல்அணி இழந்தே.

கழிகலம் மகடூஉப் போல!

← பாடல் 2359பாடல் 2361 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்