நூல்கள்›புறநானூறு›பாடல் 2359

பாடல் 2359

வளரத் தொடினும், வெளவுபு திரிந்து,

விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்

தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்

உளரும் கூந்தல் நோக்கி, களர

கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் . . . .

<br

பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,

காணலென் கொல்? என வினவினை வரூஉம்

பாண! கேண்மதி, யாணரது நிலையே;

புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,

எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும், . . . .

கையுள போலும் கடிதுஅண் மையவே;

முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்

நெடுநிரை தழீஇய மீளி யாளர்

விடுகணை நீத்தம் துடிபுணை யாக,

வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து, . . . .

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்

வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்

கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்

நிரையொடு வந்த உரைய னாகி,

உரிகளை அரவ மானத், தானே . . . .

அரிதுசெல் உலகில் சென்றனன்; உடம்பே,

கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,

கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,

அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;

உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, . . . .

மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,

இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,

படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

கேண்மதி பாண!

← பாடல் 2358பாடல் 2360 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்