பாடல் 2356
செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால்,
அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண்,
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்,
செவிஇறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
யார்கொலோ, அளியன் தானே? தேரின் . . . .
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும், இலனே; காலைப்,
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்,
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்,
சிலையின் மாற்றி யோனே; அவைதாம் . . . .
மிகப்பல ஆயினும், என்னாம் - எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள்உறை மத்தொலி கேளா தோனே?
செருப்பிடைச் சிறு பரல்!