பாடல் 2355
கலம் செய்கோவே, கலம் செய்கோவே,
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத், தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி . . . .
அகலிது ஆக வனைமோ,
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே.
அகலிதாக வனைமோ!