பாடல் 2353
இளையரும் முதியரும் வேறுபுலம் படர,
எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல,
இடைச்சுரத்து இறுத்த, மள்ள! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,
இன்னன் ஆயினன், இளையோன் என்று, . . . .
நின்னுரை செல்லும் ஆயின், மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்,
புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு என, நாளும்
ஆனாது புகழும் அன்னை . . . .
யாங்குஆ குவள்கொல்? அளியள் தானே!
ஆனாது புகழும் அன்னை!