பாடல் 2352
என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,
நாகாஅல் என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங்கை ஓச்சிக், . . . .
கிளையுள்ஒய்வலோ? கூறுநின் உரையே!
கூறு நின் உரையே!