பாடல் 2349
மலிந்த கொழுந் துவை அடிசில்,
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே . . . .
புல்லென்றனையால் வளங்கெழு திருநகர்,
வான் சோறு கொண்டு, தீம் பால் வேண்டும்,
முனித்தலைப் புதல்வர் தந்தை,
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.
மனையும் மனைவியும்!