பாடல் 2347
அளிய தாமே சிறு வெள்ளாம்பல்,
இளையம் ஆகத் தழையாயினவே, இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்,
அல்லிப்படூஉம் புல் ஆயினவே . . . .
அளிய தாமே ஆம்பல்!