நூல்கள்›புறநானூறு›பாடல் 2346

பாடல் 2346

யானை தந்த முளிமர விறகின்

கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;

மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,

மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,

நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப், . . . .

பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,

தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்

முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்

சிறுநனி தமியள் ஆயினும்,

இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே! . . . .

பேரஞர்க் கண்ணள்!

← பாடல் 2345பாடல் 2347 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்