நூல்கள்›புறநானூறு›பாடல் 2345

பாடல் 2345

பல்சான் றீரே; பல்சான் றீரே

செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;

துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, . . . .

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை, வல்சி ஆகப்,

பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; . . . .

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்

பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற

வள்இதழ் அவிழ்ந்த தாமரை

நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! . . . .

பொய்கையும் தீயும் ஒன்றே!

← பாடல் 2344பாடல் 2346 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்