நூல்கள்›புறநானூறு›பாடல் 2342

பாடல் 2342

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்

செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,

தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,

தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,

மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு . . . .

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,

நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,

கரையவர் மருளத், திரையகம் பிதிர,

நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,

குளித்துமணற் கொண்ட கல்லா இளமை . . . .

அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ -

"தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,

இருமிடை மிடைந்த சிலசொல்

பெருமூ தாளரோம்" ஆகிய எமக்கே?

யாண்டு உண்டுகொல்?

← பாடல் 2341பாடல் 2343 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்