நூல்கள்›புறநானூறு›பாடல் 2341

பாடல் 2341

இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;

நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,

பாணன் சூடான்; பாடினி அணியாள்;

ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை . . . .

முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

முல்லையும் பூத்தியோ?

← பாடல் 2340பாடல் 2342 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்