பாடல் 2338
தொடி யுடைய தோள் மணந்தணன்;
கடி காவிற் பூச் சூடினன்;
தண் கமழுஞ் சாந்து நீவினன்;
செற் றோரை வழி தபுத்தனன்;
நட் டோரை உயர்பு கூறினன்; . . . .
வலியரென, வழி மொழியலன்;
மெலியரென, மீக் கூறலன்;
பிறரைத் தான் இரப் பறியலன்;
இரந் தோர்க்கு மறுப் பறியலன்;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; . . . .
வருபடை எதிர் தாங்கினன்;
பெயர் படை புறங் கண்டனன்;
கடும் பரிய மாக் கடவினன்;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்;
ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்; . . . .
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! . . . .
படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!
இடுக, சுடுக, எதுவும் செய்க!