பாடல் 2339
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும், ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு,
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, . . . .
மேலோர் உலகம் எய்தினன், எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும்,
கள்ளியம் பறந்தலை ஒரு சிறை அல்கி,
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது, . . . .
புல்லென் கண்ணர், புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு, கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.
பிறர் நாடுபடு செலவினர்!