நூல்கள்›புறநானூறு›பாடல் 2336

பாடல் 2336

நீடுவாழ்க! என்று, யான் நெடுங்கடை குறுகிப்,

பாடி நின்ற பசிநாட் கண்ணே,

கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்,

பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்

வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என . . . .

நச்சி இருந்த நசைபழுது ஆக,

அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு,

அளியர் தாமே ஆர்க என்னா

அறன்இல் கூற்றம் திறனின்று துணிய,

ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் . . . .

வாழைப் பூவின் வளைமுறி சிதற,

முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்

கள்ளி போகிய களரியம் பறந்தலை,

வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;

ஆங்கு அது நோயின்று ஆக, ஓங்குவரைப் . . . .

புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்,

எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலி திரைக்

கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று,

நனியுடைப் பரிசில் தருகம்,

எழுமதி, நெஞ்சே! துணிபுமுந் துறுத்தே . . . .

சோற்றுப் பானையிலே தீ!

← பாடல் 2335பாடல் 2337 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்