நூல்கள்›புறநானூறு›பாடல் 2335

பாடல் 2335

கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்

சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,

மலை கெழு நாட மா வண் பாரி,

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்

புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே . . . .

பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,

ஒருங்கு வரல் விடாஅது ‘ஒழிக’ எனக் கூறி,

இனையை ஆதலின் நினக்கு மற்று யான்

மேயினேன் அன்மையானே, ஆயினும்,

இம்மை போலக் காட்டி, உம்மை . . . .

இடை இல் காட்சி நின்னோடு

உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே.

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!

← பாடல் 2334பாடல் 2336 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்