நூல்கள்›புறநானூறு›பாடல் 2334

பாடல் 2334

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,

பெரிய கள் பெறினே

யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,

சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,

பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே, . . . .

என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே,

அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே,

நரந்தம் நாறும் தன் கையால்

புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே,

அருந்தலை இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ . . . .

இரப்போர் கையுளும் போகி

புரப்போர் புன் கண் பாவை சோர

அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்

சென்று வீழ்ந்தன்று அவன்

அரு நிறத்து இயங்கிய வேலே, . . . .

ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ,

இனிப் பாடுநரும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை,

பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மா மலர்

சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று

ஈயாது வீயும் உயிர்தவப் பலவே . . . .

அருநிறத்து இயங்கிய வேல்!

← பாடல் 2333பாடல் 2335 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்