பாடல் 2332
பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண், . . . .
போர்அடு தானை, எவ்வி மார்பின்
எகுஉறு விழுப்புண் பல என
வைகறு விடியல், இயம்பிய குரலே.
பொய்யாய்ப் போக!