பாடல் 2331
இல்லாகியரோ காலை மாலை,
அல்லாகியர் யான் வாழும் நாளே,
நடுகல் பீலி சூட்டி, நார் அரி
சிறு கலத்து உகுப்பவும், கொள்வன் கொல்லோ,
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய . . . .
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?
கொள்வன் கொல்லோ!