பாடல் 2329
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்,
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்,
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், . . . .
பொய்யா எழினி பொருது களம் சேர,
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி . . . .
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்,
நேரார் பல் உயிர் பருகி . . . .
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.
நீ இழந்தனையே கூற்றம்!