நூல்கள்›புறநானூறு›பாடல் 2328

பாடல் 2328

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்

முடப் பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காயப்,

பங்குனி உயர் அழுவத்துத், . . . .

தலை நாள்மீன் நிலை திரிய,

நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,

தொல் நாள்மீன் துறை படியப்,

பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது

அளக்கர்த் திணை விளக்காகக், . . . .

கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,

ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே;

அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,

பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்

நோயிலன் ஆயின் நன்றுமன் தில்லென . . . .

அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,

அஞ்சினம்; எழுநாள் வந்தன்று, இன்றே;

மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,

திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,

காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும், . . . .

கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,

மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,

ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,

தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ -

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு . . . .

அளந்து கொடை அறியா ஈகை,

மணிவரை அன்ன மாஅ யோனே?

மறந்தனன் கொல்லோ?

← பாடல் 2327பாடல் 2329 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்