நூல்கள்›புறநானூறு›பாடல் 2327

பாடல் 2327

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!

இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை

அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,

நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!

அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்? . . . .

நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்

புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,

விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன

சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்

கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் . . . .

தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,

அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி

வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்

இருநிலம் திகிரியாப், பெருமலை

மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? . . . .

ஒல்லுமோ நினக்கே!

← பாடல் 2326பாடல் 2328 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்