நூல்கள்›புறநானூறு›பாடல் 2326

பாடல் 2326

நனி பேதையே, நயன் இல் கூற்றம்!

விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை,

இன்னும் காண்குவை நன்வாய் ஆகுதல்,

ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்

குருதி அம் குரூஉப்புனல் பொரு களத்து ஒழிய, . . . .

நாளும் ஆனான் கடந்து அட்டு என்று நின்

வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்

நின்னோர் அன்ன பொன் இயல் பெரும்பூண்

வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி

இனையோன் கொண்டனை ஆயின், . . . .

இனி யார் மற்று, நின் பசி தீர்ப்போரே.

நயனில் கூற்றம்!

← பாடல் 2325பாடல் 2327 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்