நூல்கள்›புறநானூறு›பாடல் 2320

பாடல் 2320

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;

ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;

அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;

திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;

மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; . . . .

துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;

அனையன் என்னாது, அத்தக் கோனை,

நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;

பைதல் ஒக்கல் தழீஇ, அதனை

வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்! . . . .

நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,

கெடுவில் நல்லிசை சூடி,

நடுகல் ஆயினன் புரவலன் எனவே.

வைகம் வாரீர்!

← பாடல் 2319பாடல் 2321 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்