நூல்கள்›புறநானூறு›பாடல் 2316

பாடல் 2316

அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,

எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;

அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்

தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, . . . .

இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,

இனையதோர் காலை ஈங்கு வருதல்;

வருவன் என்ற கோனது பெருமையும்,

அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே; . . . .

அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்

சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை

அன்னோனை இழந்தஇவ் வுலகம்

என்னா வதுகொல்? அளியது தானே!

நெஞ்சம் மயங்கும்!

← பாடல் 2315பாடல் 2317 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்