பாடல் 2315
“கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது, யாண்டு பல கழிய
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே, தோன்றல், அதற்பட ஒழுகல்” என்று
ஐயம் கொள்ளன்மின் ஆர் அறிவாளீர்! . . . .
இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே,
தன் பெயர் கிளக்கும் காலை, “என் பெயர்
பேதைச் சோழன்” என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன், அதன்தலை, . . . .
இன்னது ஓர் காலை நில்லலன்,
இன்னே வருகுவன், ஒழிக்க அவற்கு இடமே.
அவனுக்கும் இடம் செய்க!