நூல்கள்›புறநானூறு›பாடல் 2314

பாடல் 2314

கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல்

தாதெரு மறுகின் போதொடு பொதுளிய

வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ

ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை

அவரை கொய்யுநர் ஆர மாந்தும், . . . .

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்,

பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே,

செல்வக் காலை நிற்பினும்,

அல்லல் காலை நில்லலன் மன்னே.

அல்லற்காலை நில்லான்!

← பாடல் 2313பாடல் 2315 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்