நூல்கள்›புறநானூறு›பாடல் 2313

பாடல் 2313

`செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே

ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;

யானை வேட்டுவன் யானையும் பெறுமே;

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; . . . .

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,

செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;

செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; . . . .

மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்

கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,

தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,

நல்வினையே செய்வோம்!

← பாடல் 2312பாடல் 2314 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்