நூல்கள்›புறநானூறு›பாடல் 2312

பாடல் 2312

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,

வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!

பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,

நின்தலை வந்த இருவரை நினைப்பின்,

தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர், . . . .

அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்:

நினையுங் காலை, நீயும் மற்றவர்க்கு

அனையை அல்லை; அடுமான் தோன்றல்!

பரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீ

உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும் . . . .

ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;

அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்

இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!

நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த

எண்ணில் காட்சி இளையோர் தோற்பின், . . . .

நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?

அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,

இகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;

அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல்விரைந்து

எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு . . . .

ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது

செய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்

அரும்பெறல் உலகத்து ஆன்றவர்

விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.

நினையும் காலை!

← பாடல் 2311பாடல் 2313 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்