நூல்கள்›புறநானூறு›பாடல் 2311

பாடல் 2311

நுங்கோ யார் என வினவின், எங்கோக்

களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்

யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா

ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ

வைகு தொழின் மடியும் மடியா விழவின் . . . .

யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்

பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகிக்,

கோழியோனே கோப்பெருஞ்சோழன்,

பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,

வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே . . . .

யாம் உம் கோமான்?

← பாடல் 2310பாடல் 2312 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்