நூல்கள்›புறநானூறு›பாடல் 2308

பாடல் 2308

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர்

கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்

அகல் அடை அரியல் மாந்திக், தெண்கடல்

படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும் . . . .

மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!

பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகத்து.

பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்

பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்.

பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் . . . .

நசைதர வந்து, நின்இசை நுவல் பரிசிலென்

வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!

ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்;

நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள்

குறுநணி காண்குவ தாக - நாளும், . . . .

நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித்,

தெரியிழை அன்ன மார்பின்,

செருவெம் சேஎய்! நின் மகிழ்இரு க்கையே!

நல்நாட்டுப் பொருந!

← பாடல் 2307பாடல் 2309 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்