நூல்கள்›புறநானூறு›பாடல் 2307

பாடல் 2307

'குன்றும் மலையும் பலபின் ஒழிய,

வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என

நின்ற என்நயந்து அருளி, 'ஈது கொண்டு,

ஈங்கனம் செல்க, தான்' என என்னை

யாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்? . . . .

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்

தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர்

துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

வாணிகப் பரிசிலன் அல்லேன்!

← பாடல் 2306பாடல் 2308 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்