நூல்கள்›புறநானூறு›பாடல் 2306

பாடல் 2306

எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,

பருகு அன்ன வேட்கை இல்அழி,

அருகிற் கண்டும் அறியார் போல,

அகம்நக வாரா முகன்அழி பரிசில்

தாள்இலாளர் வேளார் அல்லர்? . . . .

வருகென வேண்டும் வரிசை யோர்க்கே

பெரிதே உலகம்; பேணுநர் பலரே;

மீளி முன்பின் ஆளி போல,

உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென

நோவா தோன்வயின் திரங்கி, . . . .

வாயா வன்கனிக்கு உலமரு வோரே.

வருகென வேண்டும்!

← பாடல் 2305பாடல் 2307 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்