நூல்கள்›புறநானூறு›பாடல் 2305

பாடல் 2305

வாயி லோயே! வாயிலோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! . . . .

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?

அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,

வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; . . . .

மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே;

எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.

எத்திசைச் செலினும் சோறே!

← பாடல் 2304பாடல் 2306 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்