நூல்கள்›புறநானூறு›பாடல் 2304

பாடல் 2304

முற்றிய திருவின் மூவர் ஆயினும்,

பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;

விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி

உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்

தாளுளம் தபுத்த வாள்மிகு தானை, . . . .

வெள்வீ வேலிக் கோடைப் பொருந!

சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய

மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,

நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!

ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக், . . . .

கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ

நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு

ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்

களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.

பெட்பின்றி ஈதல் வேண்டலம்!

← பாடல் 2303பாடல் 2305 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்