நூல்கள்›புறநானூறு›பாடல் 2303

பாடல் 2303

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் . . . .

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை . . . .

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

அதனினும் உயர்ந்தது!

← பாடல் 2302பாடல் 2304 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்