நூல்கள்›புறநானூறு›பாடல் 2301

பாடல் 2301

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்

கட்சி காணாக் கடமா நல் ஏறு

கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிரக்

கடிய கதழும் நெடு வரைப் படப்பை,

வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, . . . .

இரு பால் பெயரிய உருகெழு மூதூர்க்

கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய

நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி,

நுந்தை தாயம் நிறைவுற எய்திய

ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல், . . . .

நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்

புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை

இகழ்ந்ததன் பயனே, இயல் தேர் அண்ணல்,

எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று இவர்

கைவண் பாரி மகளிர் என்ற என் . . . .

தேற்றாப் புன் சொல் நோற்றிசின் பெரும,

விடுத்தனென், வெலீஇயர் நின் வேலே, அடுக்கத்து

அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை

மாத்தகட்டு ஒள் வீ தாய துறுகல்

இரும்புலி வரிப் புறம் கடுக்கும் . . . .

பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே.

கைவண் பாரி மகளிர்!

← பாடல் 2300பாடல் 2302 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்