பாடல் 2300
இவர் யார் என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர், யானே . . . .
தந்தை தோழன், இவர் என் மகளிர்,
அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே,
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு . . . .
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேள விறல் போர் அண்ணல்,
தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே,
ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல், . . . .
யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால் வரைக் கிழவ, வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே . . . .
இவர் என் மகளிர்!