நூல்கள்›புறநானூறு›பாடல் 2299

பாடல் 2299

பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்

கனி கவர்ந்து உண்ட கருவிரல் கடுவன்

செம்முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி

மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்துக்

கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப, . . . .

நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்

களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை

விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே,

இவரே பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை

நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் . . . .

கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்,

யானே பரிசிலன் மன்னும் அந்தணன், நீயே

வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்,

நினக்கியான் கொடுப்பக் கொண்மதி, சினப்போர் . . . .

அடங்கா மன்னரை அடக்கும்,

மடங்கா விளையுள் நாடு கிழவோயே.

பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!

← பாடல் 2298பாடல் 2300 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்