நூல்கள்›புறநானூறு›பாடல் 2296

பாடல் 2296

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு

கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,

கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு

மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,

உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு . . . .

செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,

மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்

வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;

எம்மால் வியக்கப் படூஉ மோரே,

இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த . . . .

குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,

புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,

சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்

பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;

மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் . . . .

உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;

நல்லறி வுடையோர் நல்குரவு

உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

நல் குரவு உள்ளுதும்!

← பாடல் 2295பாடல் 2297 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்