பாடல் 2290
யாண்டு பலவாக, நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க அதன்தலை . . . .
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.
நரையில ஆகுதல்!