பாடல் 2288
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, . . . .
பிறவும் எல்லாம் ஓரொக்குமே,
செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.
உண்பதும் உடுப்பதும்!