பாடல் 2287
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், . . . .
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்,
பயக்குறை இல்லைத், தாம் வாழும் நாளே.
மக்களை இல்லோர்!