நூல்கள்›புறநானூறு›பாடல் 2284

பாடல் 2284

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்

காவல் சாகாடு உகைப்போன் மாணின்

ஊறு இன்றாகி ஆறு இனிதுபடுமே,

உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்

பகைக் கூழ் அள்ளல் பட்டு, 5

மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.

ஆறு இனிது படுமே!

← பாடல் 2283பாடல் 2285 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்